கரூர் துயர சம்பவம் விவகாரம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த நபர்களை வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட சென்ற அதிகாரிகள்.
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த நபர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று மூன்றாவது நாளாக உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதற்காக கரூர் சுற்றுலா மாளிகையில் இருந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றுள்ளனர்.
சிபிஐ விசாரணையில் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது அங்கு இருந்தபோது நடந்த நிகழ்வுகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

