கரூர் சிபிஐ அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் நேற்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் என 11 பேர் ஆஜராகி இருந்தனர். இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் என நேற்று ஆஜரான இரண்டு பேரிடம் மீண்டும் விசாரணை நடைபெற்றது.
மேலும் ஆறு பேர் இன்று விசாரணை ஆஜராகினர். இன்று ஒரே நாளில் 8 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இரண்டு நாட்களில் இதுவரை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் என மொத்தம் 16 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அழைப்பு விடுத்தது, வாகனங்களின் உரிமம், சிகிச்சையில் சேர்க்கப்பட்ட போது பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான 8 பேரிடம் தொடர்ந்து 8 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணை முடிந்து தற்போது அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

