கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் தங்கி கடந்த 19ஆம் தேதி முதல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் இதுவரை வேலுச்சாமிபுரம் பகுதியில் வசித்த பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அங்கு பணியில் இருந்த காவலர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
அதை தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுன இடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில் கடந்த ஐந்து நாட்களாக இந்த கூட்டத்தில் சென்று பாதிக்கப்பட்ட நபர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று 108 ஆம்புலன்சில் பணியாற்றும் அதிகாரி மற்றும் ஓட்டுநர் விசாரணைக்காக ஆஜராகினர். பின்னர் சில நிமிடத்திலேயே அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்.
மேலும் இந்த நிகழ்வு சம்பந்தமாக கூட்டத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சமன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

