Skip to content

கரூர்- திடீரென மயங்கி விழுந்த கல்லூரி முதல்வர் சுதா

கரூர் அரசு கலைக்கல்லூரி பேராசியர் மற்றும் கல்லூரி முதல்வர் சுதாவை கண்டித்து இரண்டாவது நாளாக கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்: கல்லூரியில் பணியாற்றிய போது திடீரென முதல்வர் மயக்கம் அடைந்து விழுந்ததால் பரபரப்பு.

கரூர், தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இக்கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வரும் சுதா, அவருக்கு உறுதுணையாக செயல்படும் ஜாகிர் உசேன் ஆகிய பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு வி

ரோதமாக நடந்து வருவதாகவும் கூறி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கரூர் கிளையை சார்ந்த பேராசிரியர்கள் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக பாலியல் புகாரில் தொடர்புடைய பேராசிரியர் ஜாகிர் உசேன் மீதும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் கல்லூரி முதல்வர் சுதா மீதும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பாலியல் புகார் அளித்த மாணவிக்கு உரிய நீதி வழங்கி மாணவியின் கல்வி எந்த வகையிலும் பாதிக்காமல் பாதுகாப்பான கல்வி சூழலை வழங்க வேண்டும், இதே போன்று மாணவர்கள் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தொடங்கிய பேராசிரியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கல்லூரி முதல்வர் சுதா இன்று பணியாற்றி வந்த நிலையில் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார் அருகில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீட்டு அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம் நடைபெற்று வரும் திடீரென முதல்வர் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!