Skip to content

கரூர்….. வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்…… மாநகராட்சி அதிரடி

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 101 கடைகள் லட்சக்கணக்கில் வாடகை நிலுவை தொகை பல ஆண்டுகளாக வைத்துள்ளன. குறிப்பாக கரூர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 32 கடைகள் சுமார் 6 கோடிக்கு மேல் வாடகை  செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளன.

அந்த கடைகளுக்கு பலமுறை நோட்டீஸ் வழங்கியும், நிலுவை தொகை செலுத்தாத காரணத்தால் மாநகராட்சி ஆணையர் சுதா உத்தரவின் பேரில் காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில்  இன்று  ஈடுபட்டனர். பல்வேறு கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளனர்.

பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியின் போது வெற்றிலை, பாக்கு கடை என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கை காரணமாக கரூர் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!