Skip to content

தம்பியை கழுத்தறுத்து கொன்ற வழக்கு…. 2 பேருக்கு ஆயுள் தண்டனை… கரூர் கோர்ட்

கரூர் மாவட்டம், குளித்தலை , நங்கவரம் அருகே நெய்தலூர் காலனி, சேப்ளாபட்டியைச் சேர்ந்த காத்தான், (45) சுப்பிரமணி, (40) மற்றும் கந்தசாமி, (35) ஆகியோர்கள் இடையே பூர்விக நிலத்தை பாகம் பிரிப்பது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 13.02.2021 ஆம் தேதி காத்தான் மற்றும் சுப்பிரமணி ஆகியோர்கள் சேப்ளாபட்டியில் உள்ள அவர்களது தோட்டத்தில் நெல் அறுவடை செய்வது தொடர்பாக அவர்களது தம்பியான கந்தசாமியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் கந்தசாமியை கொலை செய்தது தொடர்பாக குளித்தலை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் குற்றவாளிகள் காத்தான், சுப்பிரமணி ஆகியோர்கள் 13.02.2021 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வழக்கானது 08.04.2021 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கரூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்று இவ்வழக்கில் விசாரணை முடிவுற்று குற்றவாளிகள் காத்தான், சுப்பிரமணி ஆகியோர்களுக்கு தம்பி கந்தசாமியை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், தலா ரூ.50,000/- அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராத்தை கட்ட தவறினால் கூடுதலாக 04 வருடம் சிறை தண்டனை ஏகபோக காலத்தில் அனுபவிக்க கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி இளவழகன் தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகளை துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வழிக்காவல் மூலம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!