Skip to content

கரூரில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ-யினர் கைது…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விலைவாசி உயர்வு, வேலையின்மை திண்டாட்டம், கைத்தறி உட்பட சிறு குறு தொழில்கள் முடக்கம், தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத சட்டங்கள், மாணவ

மாணவிகளை தற்கொலை செய்ய வைக்கும் நீட் தேர்வு, ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்த போலிசார், தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!