உலக தரத்தில் விளையாட்டு வீரர்களை, தமிழகத்தில் இருந்து உருவாக்கிட வேண்டும் என்ற உன்னத முனைப்பில் அயராது உழைத்திடும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், கரூர் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான குடியரசு
தின தடகளப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ செல்வங்களுக்கு பரிசுகளை கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் , மேற்கு மண்டல பொறுப்பாளர் V.செந்தில்பாலாஜி வழங்கினார்.