கரூர் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கரூர் திமுக மாவட்ட செயலாளரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பேசுகையில்:
75 ஆண்டு கண்ட மாபெரும் இயக்கத்தின் முப்பெரும் விழாவை கோட்டையாய் கரூரில் நடத்திட வாய்ப்பளித்த 2026 இல் திராவிட மாடல் 2.0 அமைக்கப்படும் திராவிட சுடரே உங்கள் வியூகம் என்னவென்று தெரியாமல் எதிரிகள் விழி பிதுங்கி ஓய்வு அறியாத சூரியனாக தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாகி தன் சாதனைகளால் சுடர்விடம் கழகத் தலைவர் அவர்களை வருக வருக என வரவேற்கின்றேன் உங்களுக்கு என்றும் நன்றி உரியவனாக இருப்பேன் நன்றி மறவாது உங்களை வரவேற்பதில் இந்த மண் பெருமை கொள்கின்றது புன்னகையாய் அரவணைக்கும் எங்கள் சின்னவரே அதே புன்னகையால் எதிரிகளை ஓட ஓட விரட்டும் இதயசூரியனை வருக வருக என வரவேற்கிறோம்!
மேற்கு மண்டலத்தில் இருந்து சொல்கிறேன் தளபதியின் பாதம் தொட்டு உறுதுணையாக சொல்கிறேன் 2026 திமுக வின் வெற்றி கணக்கை இங்கிருந்து தொடங்குவோம் என்று உறுதியை சொல்லி எதிரிகள் யாராக இருந்தாலும் எந்த வழியில் வந்தாலும் எத்தனை பேராக வந்தாலும் உறுதியாக சொல்கிறேன் நாம தான் ஜெயிக்கிறோம் நாம மட்டும் தான் ஜெயிக்கிறோம் வெல்வோம் 200 படைப்போம் வரலாறு என்று கூறினார்.