
கரூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் 3 மையங்களில் 2,240 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதி வருகின்றனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு காவலர் மற்றும் சிறைக்காவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது. கரூரில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேரன் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட 3 மையங்கள் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதிக் 1,630 ஆண்கள், 610 பெண்கள் என 2240 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். சென்னையைச் சார்ந்த IG ஜெயஸ்ரீ மேற்பார்வையில், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா தலைமையில் போலீசார் தேர்வு நடத்தி வருகின்றனர்.

