கரூர், தான்தோன்றிமலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
கூட்டத்தில் பங்கேற்க கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் நேரத்திற்கு முன்பாகவே வந்திருந்தனர். ஆனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் இல்லாமல் கூட்டம் தொடங்கியதால் அதிருப்தியடைந்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து கோஷங்கள் எழுப்பினர். புதிய மாவட்ட கலெக்டர் சென்னை சென்றிருந்ததால், பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் வருகை தந்தார்.
இருந்தபோதிலும் விவசாயிகளுக்கு என்று எந்த ஒரு பிரச்சனையும் தீர்க்கவில்லை என்றும், பழைய மாவட்ட ஆட்சியரும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை, இப்போது வந்த மாவட்ட ஆட்சியிலும் வரவில்லை, மாவட்ட ஆட்சியர் இல்லை என்றால் கூட்டத்தை ஒத்தி வைத்திருக்கலாம் என கூறி கோஷங்கள் எழுப்பி புறக்கணிப்பு செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

