Skip to content

கரூர்..மனைவி-மகளை கொன்ற தந்தைக்கு… இரட்டை ஆயுள் தண்டனை

கரூர் வெங்கமேடு அருகே மனைவி மற்றும் மகளை கொலை செய்த தந்தைக்கு கரூர் மகிளா நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளனர்.

கரூர் வெங்கமேடு விவிஜி நகரைச் சேர்ந்த செல்வ கணேசன் (46) டெக்ஸ்டைல்ஸில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கல்பனா (39) என்ற மனைவியும் சாரதிபாலா (5) மகளும் உள்ளனர். வீட்டில் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் அந்த நபர் இருந்த காரணத்தினால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த செல்வ கணேசன் மனைவி மற்றும் மகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு,
கொசுவர்த்தி மருந்தை கரைத்து தானும் குடித்து விட்டு மயங்கினார்.

தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரண்டு உடல்களையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமளைக்கு அனுப்பி வைத்து. மயங்கிய நிலையில் கிடந்த செல்வகணேசை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர், சிகிச்சை முடிந்ததும். அந்த நபரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

இது சம்பந்தமான வழக்கு விசாரணை கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரணை மேற்கொண்டு வந்த நீதிபதி தங்கவேல் மனைவி மற்றும் மகளை கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!