கரூரில் செப்.27ல் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
ஜன.12ம் தேதி டில்லியில் விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தவெக நிர்வாகிகள் புஸ்ஜி, ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்காத நிலையில் மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

