கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
பலருக்கு சம்மன் அனுப்பி சுற்றுலா மாளிகையில் விசாரணை மேற்

கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள் இன்று கரூர் வேலுச்சாமிபுரம் அருகே உள்ள கோதூர் பகுதியில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு சிறுமிகள் பழனியம்மாள், கோகிலா வீட்டிற்கு மூன்று சிபிஐ அதிகாரிகள் நேரில் சென்று குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காயம் அடைந்தவர்களின் வீடு மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பல்வேறு குழுக்களாக பிரிந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

