Skip to content

விஜய் பஸ் வீடியோக்களை சிபிஐ-விடம் ஒப்படைத்த தவெக

  • by Authour

தவெக வழக்கறிஞர், பனையூர் கட்சி அலுவலக உதவியாளர் மற்றும் நிர்வாகி என மூன்று பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்: வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்துள்ளதாக தகவல்.

கரூர்,வேலுச்சாமி புரத்தில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவின் படி சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து கரூரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் என 25க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 19 காவலர்கள், கூட்ட நெரிசலின் போது பாதிக்கப்பட்ட நபர்களை மீட்பதற்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் என 25 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் தவெக வழக்கறிஞர் அரசு, மற்றும் பனையூர் கட்சி அலுவலகத்தின் உதவியாளர் குரு, நிர்வாகி ஒருவர் என மொத்தம் மூன்று நபர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி சிசிடிவி வீடியோ காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை வழங்கிவிட்டு ஒரு மணி நேர விசாரணைக்கு பின்னர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

error: Content is protected !!