கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் மூன்றாவது நாளாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பி இதுவரை 25-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இன்று ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தவெக வழக்கறிஞர் அணி திருச்சி மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் அரசு மற்றும் தவெக நிர்வாகிகள் இரண்டு நபர்கள் என மொத்தம் மூன்று நபர்கள் சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ள பயணியர் மாளிகைக்கு விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.
மீண்டும் வெளியே வந்த தவெக வழக்கறிஞர் வாகனத்தில் வைத்திருந்த ஆவணங்களை உள்ளே எடுத்துச் சென்றுள்ளார்.

