தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் இன்று கரூர் வரவுள்ள நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர் ஒருவரும் தலைமை காவலர் ஒருவரும் கரூர் வருகை – பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி ஏந்திய உள்ளூர் காவலர் ஒருவர் நியமனம்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக கடந்த 17ஆம் தேதி தொடங்கி, 2 நாட்கள் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், தீபாவளியை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற நிலையில், இன்று மீண்டும் கரூர் வரவுள்ளதாக கூறப்படுகிறது.
கரூர், பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகளுக்கு மொழி பெயர்ப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மனோகரன் என்பவரும், தலைமை காவலர் ஒருவரும் தற்போது தங்கி உள்ளனர்.
மேலும், அப்பகுதியில் வெளி நபர்கள் வருகையை தடுக்கும் விதமாக துப்பாக்கி ஏந்திய உள்ளூர் காவலர் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகள் வந்ததும் இரண்டாம் கட்ட விசாரணையை மீண்டும் தொடங்க உள்ளனர். சிபிஐ தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கரூர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரி முகேஷ்குமார் மேற்பார்வையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை, ஆய்வாளர் மனோகரன் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார்.