கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொழில் முனைவோர், சமூக சேகவர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடல் கூட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி கூட்டரங்களில் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச்

செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். கரூர் மாவட்டத்தில் 2030ம் ஆண்டு 50 ஆயிரம் கோடிக்கு இலக்கு வைத்து பணியாற்றி வருவதாக தெரிவித்தனர்.
அப்போது பேசிய தயாநிதி மாறன்… கரூர் சட்டமன்ற தொகுதியில் அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி கொள்ளுங்கள், கரூர் – திருச்சி சாலை குறுகளாக இருப்பதால் முதலில் சாலையை விரிவாக்கம் செய்ய வழி செய்யுங்கள், உங்களை இலக்கை நோக்கி வெற்றி நடை

போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கோவைக்கு இணையாக போட்டி போட்டு கொண்டிருக்கிறீர்கள், முன்னேறுங்கள், அதிமுக பாஜகவிற்கு அடிகையாகி விட்டது, தங்கள் மீது வழக்கு பாயாமல் இருக்க அவர்கள் சென்று விட்டார்கள், இளைஞர்கள் கூட்டம் ஒரு நபரின் கூட்டத்திற்கு பின்னால் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொடுத்து முன்னேற்றப் பாதையில் ஸ்டாலின் கொண்டு சென்று கொண்டிருக்கிறார். நீங்கள் அனைவரும் அடுத்து 5 ஆண்டுகள் திமுக ஆட்சி தொடர நீங்கள் சந்திக்கும் நபர்களிடம் வாக்களிக்க கேட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.

