10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசுத்துறைகளில் காலியாக உள்ள 30 சதவீத காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

