கரூர் எம்.பி. ஜோதிமணியை அவதூறாகப் பேசிய விவகாரம்-பாஜக மாவட்ட தலைவர் மீது மாதர் சங்கம் புகார்.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை அவதூறாகப் பேசிய விவகாரத்தில், பாஜக மாவட்டத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் சசிகலா புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கரூர் எம்.பி. ஜோதிமணி பற்றி அருவருக்கத்தக்க மற்றும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளார் மேலும் ஒரு மக்கள் பிரதிநிதியை பொதுவெளியில் கண்ணியமற்ற முறையில் விமர்சித்தது சமூக அமைதியைக் கெடுக்கும் செயல்.
தமிழகத்தில் தொடர்ந்து பெண் அரசியல் தலைவர்களைக் குறிவைத்து பாஜகவினர் பேசி வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டத் தலைவர் சசிகலா:
“பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் சிதைக்கும் வகையில் பாஜக கட்சியினர் பேசுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மக்கள் பணியாற்றும் பெண் பிரதிநிதிகளைத் தரக்குறைவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது. செந்தில்நாதன் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். இல்லையெனில் மாதர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்

