Skip to content

கரூர்.. வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரிடம் வருவாய் சங்கங்களின் உயர்மட்ட குழு நடத்திய பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை உடனடியாக அரசாணியாக வெளியிடக்கோரி முதல் கட்டமாக தமிழகத்தில் மறியல் போராட்டம் பிப்ரவரி 10ஆம் தேதி தமிழக முழுவதும் நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக இன்று தமிழக முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் துவங்கியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், தலைமையில் நடைபெற்றது.

காத்திருப்பு போராட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறையில் பணியாற்றும் வருவாய் கிராம உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக கருதி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,

ஒவ்வொரு கிராமத்திலும் கிராம நிர்வாக அலுவலரும் உதவியாளரும் பணியாற்றும் கிராமத்தில் தங்கி பணியாற்ற வேண்டும் என்பதை தளர்த்தி கோட்டா அளவில் தங்கி பணியாற்ற வேண்டும் என மாற்ற வேண்டும் அனைத்து வருவாய்த்துறை காலி பணியிடங்களையும் விரைவாக நிரப்ப வேண்டும் ,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்.

error: Content is protected !!