தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான, குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான காவல் விருது அதிகாரிகள் என்.கண்ணன், ஏ.ஜி.பாபு, மற்றும் கரூர் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா உள்பட 23 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.