Skip to content

கரூர்- ஸ்ரீ பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் குளத்துப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய கார்த்திகை மாத திருவிழாவை முன்னிட்டு கரக பாலிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு குளத்துப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகர்,பகவதி அம்மன் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ச்சியாக சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

அதன் பின்னர் தாரை தப்பட்டைகள் முழங்க ஆலயத்தில் கரக பாலிக்கு நிகழ்ச்சி நடைபெற்று தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த மாவிளக்கு பூஜையில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செய்தனர்.

அதைத்தொடர்ந்து ஆலயத்திலிருந்து பகவதி அம்மன் கரகம் ஆலய பூசாரி தலையில் சுமந்தவாறு ஆலையம் வலம் வந்த பிறகு சுவாமி கிணற்றுக்கு கொண்டு வந்தனர்.

அதை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்ற பிறகு கார்த்திகை மாத திருவிழா சிறப்பாக நிறைவு பெற்றது.

கரூர் குளத்துப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய கார்த்திகை மாத திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!