கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தங்க தேரோட்டம் நேற்று
நடைபெற்றது தங்க தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு மாரியம்மன் க்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக தங்க ரத வாகனத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர்.
சுவாமிக்கு வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் பூசாரி சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டி தொடர்ச்சியாக மகா தீபாராதனை கட்டப்பட்டது. பின்னர் மேள தாளங்கள் முழங்கு ஆலய மண்டபத்திலிருந்து புறப்பட்ட மாரியம்மன் தங்க தேரோட்டம் ஆலயம் வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது.
தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி அமாவாசை தங்க தேரோட்ட நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலய முழுவதும் வரிசையில் நின்று தங்க தேரோட்ட நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாத வழங்கப்பட்டது.