கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளப்பட்டிக்கு முக்கிய சாலையாகவும் உள்ள நிலையில் பள்ளி அருகே நீண்ட காலமாக கழிவுநீர் வடிகால் தூர்வாராததால் அதிகளவு புழுக்களுடன் துர்நாற்றம் வீசுவதாகவும் இதுகுறித்து பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை எனவும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் உடனடியாக கழிவுநீர் வடிகாலை சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.