Skip to content

கரூர்- உங்களுடன் ஸ்டாலின் முகாம்….4.88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB

  • by Authour

காந்திகிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 16 நபர்களுக்கு 4.88 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் அருகே முல்லை நகர் விளையாட்டு மைதானத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது. பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் தனித்தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று வருகின்றனர்.

முகாமினை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் அதனை தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது பொன்னடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 16 நபர்களுக்கு 4.88 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!