கரூர் துயர சம்பவம் தொடர்பாக 10வயது குழந்தை பிரதிக் என்பவரை இழந்த ஏமூர் புதூர் சேர்ந்த சர்மிளா என்பவர் 8 வருடத்திற்கு முன்பாக விட்டுச் சென்றார். ஹாய் கணவர் நீதிமன்றத்தில் மனு அளித்தது சம்பந்தம் இல்லை எனக் கூறி கரூர் சட்ட உதவி மையத்தில் இலவச சட்ட உதவி கேட்டு நாடி உள்ளார். குடும்பத்தைப் பிரிந்துச் சென்ற, தங்களுக்கு தொடர்பில்லாத பன்னீர்செல்வம் பணத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாக உயிரிழந்த சிறுவனின் தாயார் சர்மிளா குற்றம் சாட்டினார்.
அதேபோல ஏமூர் புதூரை சேர்ந்த செல்வராஜ் தனது மனைவி சந்திரா என்பவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்து உள்ளார் . இவருக்கு அதிக நிதி உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அதே நேரத்தில் உங்களது மூத்த மகனுக்கு அரசு வேலை வாங்கித் தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த விண்ணப்பத்தில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் செல்வராஜ் என்பவரிடம் கையெழுத்து பெற்று உள்ளதாகவும், ஆனால் அந்த முக்கிய பிரமுகர் சிபிஐ விசாரணை வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் செல்வராஜ் பெயரில் மனு கொடுத்துள்ளார்.
தனக்கு தெரியாமலேயே உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தான் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பன்னீர்செல்வம் கரூர் சட்ட உதவி மையத்தில் இன்று மனு அளித்துள்ளார். இதுகுறித்து கரூர் சட்ட பணிகள் ஆணை குழு சார்பு நீதிபதி அனுராதா அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. விரைவில் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என சார்பு நீதிபதி அனுராதா தெரிவித்துள்ளதாக ஷர்மிளா மற்றும் செல்வராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.