Skip to content

கரூர் தவெக நிர்வாகி மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு

கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு புலனாய் குழு மாற்றப்பட்டதால் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 9-ஆம் தேதி ஐந்து நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில், மதியழகனிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐந்து நாட்களுக்கு போலீஸ் கஸ்டடி கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

மதியழகனுக்கு, சிறப்பு புலனாய்வு குழு 5 நாள் கஸ்டடி கேட்டு இருந்த நிலையில் 2 நாள் கஸ்டடி கொடுத்து நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் 2 நாள் கஸ்டடி முடிந்து இன்று மதியழகனை குற்றவியல் நீதிமன்றம் எண் 1 ல் ஆஜர் படுத்தினர்.

மீண்டும் 14 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் வாகனத்தில் தமிழக வெற்றி கழக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!