கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று பல்வேறு வழக்குகளில் கரூர் மாவட்ட போலீஸார் பறிமுதல் மற்றும் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ வேன் போன்ற வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. இந்த பொது ஏலம் ஏடிஎஸ்பி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள்


மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்து டோக்கன் வாங்கியவர்கள் மட்டும் பங்கேற்று இருந்தனர். வாகனத்தின் தன்மை ஏற்ப ஏலம் விடப்பட்டது.இந்த ஏலத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று இருந்தனர்.

