தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் இன்று (28.9.2025) கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாண்புமிகு
கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வி செ.ஜோதிமணி, கே.என்.அருண்நேரு, திரு.வி. செந்தில்பாலாஜி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மீ.தங்கவேல், இ.ஆ.ப., (கரூர்), மாவட்ட ஆட்சித் தலைவர் வே. சரவணன், (திருச்சிராப்பள்ளி), மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், (திண்டுக்கல்) அரசு உயர் அலுவலர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.