கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது.
கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சவுந்திரநாயகி சமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலில்

ஆருத்ரா தரிசன மஹோற்சவ விழா ஸ்ரீ நடராஜர் ரக்ஷாபந்தனம், ஸ்ரீ மாணிக்க வாசகர் திருவெம்பாவை உற்சவத்துடன் துவங்கியது.
அதனை தொடர்ந்து இன்று ஸ்ரீ அலங்காரவல்லி, சவுந்திரநாயகி சமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வர

சுவாமிக்கு பட்டாடை உடுத்தி,வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்த சுவாமிக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் சுவாமிக்கு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது . பின்னர் மொய் வைக்கும் வைபவமும் நடைபெற்றது. முன்னதாக கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

