பிரபல சீரியல் நடிகையான அமுதா குடும்ப தகராறு காரணமாக வீட்டில் இருந்த ஃபினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சீரியல்களில் நடித்து வரும் நடிகை அமுதா இன்று வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. விருகம்பாக்கம் பகுதியில் அவரது கணவருடன் வசித்து வரும் நிலையில் இருவர் இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இன்றும் தகராறு ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த அமுதா வீட்டில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
