என் வாழ்க்கையின் துணையாக கெனிஷா இருக்கிறார். அவர் தான் என் வாழ்வில் ஔியை கொண்டு வந்தார். நான் கண்ணீர், ரத்தம் என துடித்துக்கொண்டிருந்த போது, என் துன்பங்களில் இருந்து மீட்டவர் கெனிஷா பிரான்சிஸ். என் அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்ட போது கெனிஷா மட்டுமே துணையாக இருந்தார். கெனிஷாவை அவமதிக்கும் எந்த செயலையும் நான் அனுமதிக்க மாட்டேன். என் முன்னாள் மனைவியை விட்டுதான்
நான் விலக முடிவு செய்தேன். முன்பை விட இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் குழந்தைகளை வைத்து நிதி ஆதாயம் அடைய முயற்சி செய்கின்றனர். என் குழந்தைகளை விட்டு நான் பிரியவில்லை. அவர்கள் தான் என் சந்தோஷம்,பெருமை எல்லாம் என இவ்வாறு நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.