Skip to content

கேரளாவில் தெரு நாய்களை கருணை கொலை செய்ய மாநில அரசு உத்தரவு…

  • by Authour

கேரளாவில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, நாய் கடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.  இதனால் கவலையளிக்கும் விதமாக கேரளாவில் ரேபிஸ் நோய் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக, தெரு நாய்களின் கடியால் ஏற்படும் ரேபிஸ் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி,  தெரு நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மொபைல் கருத்தடை திட்டங்களை செயல்படுத்துவது,  ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது போன்றவை அம்மாநில சுகாதாரத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது.

இருப்பினும், பலர் நாய் கடித்த பிறகும் சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொல்லாமல் இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.  அத்துடன்,  சமீபத்தில் தடுப்பூசி போடப்பட்ட பிறகும் குழந்தைகள் உட்பட பலர் ரேபிஸ் நோயால்  இறந்துள்ளனர். குறிப்பாக கேரளாவில் கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 20 பேர்  ரேபிஸால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கேரளாவில் நோய் பாதித்த மற்றும் நோய் தொற்றுகளை பரப்புகிற தெரு நாய்களை கருணைக்கொலை செய்ய அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.  தெருநாய்க்கடி சம்பவங்களால் ரேபிஸ் தொற்று அதிகரித்து வருவதால், கால்நடை மருத்துவர் சான்று பெற்று கருணைக்கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

error: Content is protected !!