சிவங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறை சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் தமிழர்களின் நாகரீகம் 5 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது என கண்டறியப்பட்டது. இதற்கான ஆவணங்கள், ஆதாரங்களை கீழடியில் தொல்பொருள் துறை இயக்குனராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணா மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மத்திய அரசு அதை ஏற்காமல், அதை திருப்பி அனுப்பியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எந்தவிததத்திலும் அறிக்கை மாற்றப்பட வேண்டியது இல்லை. அது சரியாகவே இருக்கிறது என்று அமர்நாத் கூறினார். இந்த நிலையில் அமர்நாத் உ.பி. மாநிலம் நொய்டாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.
