பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் மெய்யநாதன்,சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், பழனியாண்டி, கதிரவன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மேயர் அன்பழகன், ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட கழக செயலாளரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாநகரக் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள முத்தரையர் மணிமண்டபத்தில் அமைச்சர் மகேஸ் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சருடன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன் மாவட்ட கழக நிர்வாகிகள் செங்குட்டுவன் லீலாவேலு மூக்கன் கோவிந்தராஜ் பொன்செல்லையா சந்திரமோகன் பகுதி செயலாளர்கள் தர்மராஜ் மணிவேல் பாபு மோகன் சிவக்குமார் நகரக் கழக செயலாளர் செல்வம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருணாநிதி ராஜேந்திரன்
பழனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவர் அல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கான தலைவர். அவர் வழியில் தமிழுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து முத்தரையர் சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் சார்பில் பேரரசர் பெரும்பிடுகு சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது. அதிமுக, மதிமுக, காங்கிரஸ் மற்றும் தவெக அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.