திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் உரையாற்றினார்:
இது முப்பெரும் விழாவா விரைவில் நாம் சந்திக்கக்கூடிய வெற்றி விழாவா இது கரூர் இல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊர்
கொட்டும் மழையில் அறிஞர் அண்ணா அவர்கள் இதே நாளில் வடசென்னை பகுதியில் அமைந்துள்ள ராபின்சன் பூங்காவில் கொட்டுகின்ற மழையில் தொடங்கி வைத்தார்.
இந்த கலகம் 75 ஆண்டு காலம் மட்டுமல்ல நூற்றாண்டு காலம் காண போகிறோம்
உங்ககிட்ட பேசுறத விட இந்த கொட்டும் மழையிலும் கூட உங்களை பார்த்துகிட்டே இருக்கலாம் போல எனக்கு என்ன உணர்ச்சி அடடா என்ன ஆர்வம் என் உயிரோடு கலந்து இருக்கக்கூடிய மொத்த படைக்க தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகளே உங்களுக்கு என்னுடைய முதல் வணக்கம்
உடல்நிலை காரணமாக வர முடியாத சூழ்நிலையில் தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கும் துரைமுருகன் அவர்களுக்கும் என் வணக்கம்
இந்த ஆண்டு இந்த ஆண்டு முப்பெரும் விழா கரூரில் நடத்த வேண்டும் என அனுமதி கேட்டு அருமை சகோதரர் செந்தில் பாலாஜி அவர்கள் கேட்டார் நானும் ஒப்புதல் அளித்தேன் பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாடாக நடத்திக் கொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி நான் கோடு போட சொன்னால் அவர் ரோடு போடுகிறார் மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர் தான் செந்தில் பாலாஜி என பெருமிதம் தெரிவித்தார். இதனால் வெளியே இருந்தால் நிம்மதியாக தூங்க முடியாது என முடக்க பார்த்தார்கள் அவரை முடக்க முடியுமா எடுத்த பணியை வெற்றிகரமாக முடித்து காட்டுவார் நான் உறுதியாக சொல்கிறேன் கழக வரலாற்றில் இது போன்ற பிரம்மாண்ட விழா நடைபெற்றிருக்காது ஒட்டுகின்ற மழையை பொறுப்பெடுத்தாமல் நீங்கள் எல்லாம் குடையை பிடித்தவாறு நாற்காலியை தூக்கி தலை மேல் வைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருப்பதே அதுவே சாட்சி
14 வயதில் கருப்பு சிவப்பு கொடி பிடித்து கழகம் என்று உழைக்கத் தொடங்கிய இந்த இயக்கத்தில் தலைமைக் கழகத்திற்கு கொண்டு வந்தவர்கள் ஓயாமல் இருக்கின்ற உதிக்கின்ற உதயசூரியன் போல் உங்களை பார்த்ததும் புத்துணர்ச்சி ஆகிறது
இரவு பகல் காடு மேடு இரவு பகல் அடக்குமுறைக்கு எல்லாம் அஞ்சாமல் எல்லாரும் போராடி தான் என்னை தலைவர் ஆக்கி இருக்கிறீர்கள் மக்களுடைய ஆதரவோடு திராவிடம் ஆனால் அரசை உருவாக்கி இருக்கிறீர்கள்.
உங்களை சந்திப்பதை விட வேறு என்ன எனக்கு மகிழ்ச்சி முப்பெரும் விழா என்றால் பகுத்தறிவு தந்தை பெரியார் பிறந்த நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் திராவிட முன்னேற்ற கழகம் உதயமாகிய நாள் ஆகிய மூன்றையும் சேர்த்து முப்பெரும் விழா கொண்டாடுகிறோம் விழாவில் நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து மேடு பள்ளங்களை புதுப்பிக்கும் அடுத்த செர்ல உள்ள பாதையை வெற்றி பாதையாக அமைத்து ஒன்று கூடி இருக்கிறோம் கூடி கலையும் விழாவாக இல்லாமல் அறிவார்ந்த கருத்தாளுமை எண்ணங்களை பகிர்ந்து பல்கலை கொள்கைகளை கூர்நீத்தும் நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது திராவிட கொடியை தூக்கிப் பிடித்தவர்களுக்கு விருதுகளை வழங்குகிறோம் இந்த ஆண்டு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் விருதை கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்றகுழுத் தலைவரும் எனது அருமை தங்கை கனிமொழிக்கு பெற்று இருக்கிறார்
அவர் பார்த்தால் கனிமொழி நாடாளுமன்றத்தில் பேசினால் கர்ஜனை மொழி திராவிட இயக்கத்தின் திருமகள் பெரியாரின் பேத்தியாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கிறார் அண்ணாவின் அவ பெயரில் ஆன விருதை சிவ சீதாராமன் அவர்கள் விருது பெற்றிருக்கிறார் அரசு ஊழியராக இருந்த இவரை ராஜினாமா செய்து விட்டு கழகப் பணியாற்ற வா என்று கலைஞர் அழைத்தார் எப்போதும் கலைஞர் சொல்லை தட்டாத தொண்டர் சிவ சீதாராமன் அவர்கள்
தமிழின தலைவர் கலைஞரின் விருதை நூற்றாண்டு கண்ட சோம ராமச்சந்திரன் விருதை பெற்றிருக்கிறார் விசா காலத்தில் ஓராண்டு காலம் சிறையில் இருந்தார்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விருதை மறைந்த குழுத்தலை சிவராமன் குடும்பத்தினர் பெற்றிருக்கின்றனர் கலைஞர் முதன் முறையாக போட்டியிட்ட குளித்தலை தொகுதி சார்ந்தவர்
இனமான பேராசிரியர் விருதை மருதூர் ராமலிங்கம் அவர்கள் பெற்றிருக்கிறார் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஓயாமல் இன்று வரை உழைத்துக் கொண்டிருக்கிறார்
என்னுடைய பெயரின் விருதை பொங்கலூர் பழனிச்சாமி அவர்கள் பெற்றிருக்கிறார் மொழி போராட்டம் காலத்தில் அவரும் ஒருவர் கொங்கு வெள்ளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் கோரிக்கை ஏற்கப்பட்டது என கலைஞர் தெரிவித்தார்
அடுத்து முரசொலி அறக்கட்டளை சார்பில் செல்வம் பெயரில் பெற்றிருப்பவர் பத்திரிகையாளர் எழுத்தாளர் எழுத்தாளர் பன்னீர்செல்வம் பன்னீர்செல்வம் திராவிட இயக்கத்தின் சமூக நீதியை மானுட பற்றை சிந்தனைகளை ஆங்கில ஊடகங்களில் எழுதிய ஏ எஸ் பன்னீர்செல்வம் அவர்கள் கழகத்தின் வெற்றிக்கும் ஆணிவேராக ஆணிவேராக ஒன்றியம் பகுதி நகரம் பேரூர் கழகம் அவர்களும் விருது பெற்றிருக்கிறார்கள்.
விருது பெற்றிருக்கும் அனைவரையும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
திறமை உழைப்பு உயர்வு ஆற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைவற்றை இருப்பவர்கள் தான் திராவிடர் கூட்டம்
தந்தை பெரியார் முத்தமிழ், பேரறிஞர் அண்ணா,முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழி நின்று தமிழகத்தின் எழுச்சிக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உண்மையாக உழைப்பவர்கள் நாம்
2019 ஆண்டு முதல் நான் ஈடுபட்ட அனைத்து தேர்தலிலும் நாம் வெற்றி பெற்று வருகிறோம் இது சாதாரண வெற்றி அல்ல எதிரிகளை கலங்கடிக்கக் கூடிய வெற்றியை பெற்றிருக்கிறோம்
இந்த வெற்றிப் பயணம் தமிழக மக்களின் ஆதரவோடு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் தொடரும்
திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும்
இந்தியாவில் ஆயிரக்கணக்கான அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன எந்த இயக்கத்திலும் உங்களைப் போன்ற கொள்கை நாம் கலகத்தை காப்போம் கழகம் உங்களை காக்கும் கொள்கையோடு இருக்கும் வரை எந்த கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடிக்க முடியாது
உங்களுக்கு தமிழ் இன தலைவனாக இருப்பது நான் வாழ்க்கையில் கண்ட பாக்கியம் உங்கள் உழைப்பை தொடர்ந்து கொடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என 2026 ஆம் ஆண்டு தேர்தல் களப்பணி ஆற்ற வேண்டும் தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்தது என வரலாறு படைக்க வேண்டும் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் எல்லா கிராமங்களுக்கும் சென்று எல்லா வீடுகளுக்கும் சென்று ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்களை ஒன்றிணைத்து விடும் ஒரு கோடி மக்கள் நம்மளை நம்பி இணைந்திருக்கிறார்கள் என்றால் தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கு நம்முடைய திராவிட கழகம் தான் அதற்கு துணியாக இருப்போம் என்று வந்திருக்கின்றோம் இன்றைக்கு ஒருங்கிணைத்துள்ளனர் தமிழகத்தின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது எந்த கொள்கை மக்களுக்கு நன்றாக தெரியும் அது காவி கொள்கை
2000 ஆண்டுகளாக அந்த கொள்கை ஏதிர திரவிடம் இந்த போராடிக் கொண்டிருக்கிறது அந்தக் கொள்கையின் அரசியல் முகம் யார் பாஜக ஒன்றிய அரசு பாஜகவினுடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி என்ன பேசி உள்ளார் கடந்த அதிமுக ஆட்சியை காப்பாத்தினது பாஜக தான் என்று உண்மையை உடைத்துள்ளார் அந்த கைப்பாவை அரசை தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறிய திமுக தான் காரணம் என்று நம் மீது பாஜக வன்மத்தை கொட்டிக் கொண்டிருக்கிறது அதனால் தான் தொடர்ந்து நமக்கு இவ்வளவு இடையூறுகளை ஒன்றிய அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது அதனை பார்த்து முடங்கி விடுவோம் என்று நினைத்தார்கள் திமுக என்ன மிரட்டலுக்கு பயப்படும் கட்சியா இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநில கட்சி மாநிலத்தை ஆட்சியைப் பிடித்தது திராவிட முன்னேற்றக் கழகம் தான் 74 கால வரலாறு இருக்கிறது அதன் பிறகு வந்த தமிழ்நாட்டில் வந்த அனைத்து கட்சிகளும் திமுகவை அழிப்போம் ஒழிப்போம் என்று சொன்னார்கள் இப்பொழுதும் திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என பேசி வருகின்றனர் என்ன மாற்றப் போகிறார்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றி பின்னோக்கி இழுத்து செல்ல போகிறார்களா
நம்ம கொள்கையை விட சிறந்த கொள்கை என யாராவது பேசுகிறார்களா மாற்றம் மாற்றம் என்று சொன்னவர்கள் எல்லாரும் மறைந்து போய்விட்டார்கள்
திமுக என்றும் மக்கள் மனதை விட்டு மறையவில்லை இதுதான் தமிழ்நாட்டின் அரசியல் நம்முடைய கொள்கைதான் நம்முடைய பலம் நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது ஆட்சி பொறுப்பேற்ற பொழுது நிறைய நெருக்கடிகளில் ஆட்சிப் பொறுப்பேற்றும் நிதி பற்றாக்குறை மற்றொரு பக்கம் கொரோனா பெருந்துற்று இதையெல்லாம் தாண்டி நான்கரை ஆண்டு காலத்தில் இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாடு நோக்கி முதலீடுகளை ஈற்று வேலை வாய்ப்புகளை உருவாக்கி இந்தியாவில் டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியை பெற்றிருக்கக் கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடு நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் அளவிற்கு முதன்மை மாநிலமாக முன்னேற்றி உள்ளோம் இதனால்தான் திராவிட மாடல் அரசை பார்த்து சிலருக்கு வயிறு எரிகிறது வாய்க்கு வரும் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர் அவர்கள் கண்ணீர் ஆட்டுக்காக ஓநாய் வடிக்கிற கண்ணீர் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி அவர்கள் ஆட்சி அதிகாரம் இருந்த பொழுது எதையும் செய்யாமல் தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுக்க தெம்போ திராணியோ இல்லாமல் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்தார் பாஜக தன்னுடன் இப்போதும் இருப்பதாக சொல்லி வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் மாண்பே இல்லாமல் தரம் தாழ்ந்து ஒருமையில் பேசி வருகிறார் கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் பழனிச்சாமி தரத்தை மக்கள் எடை போட்டு பார்ப்பார்கள் என நானும் விட்டுவிட்டேன் ரயிடுலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அதிமுகவை அடமானம் வைத்துள்ளார்
திராவிடம் என்றால் என்ன என தெரியாது என சொன்னவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை பொறுப்பில் உள்ளார் அதுதான் வெட்கக்கேடு
அதிமுக தொடங்கிய போது நம்முடைய கொள்கை அண்ணா யுசம் என்று சொன்னார்கள் அதை இப்பொழுது பழனிச்சாமி அவர்கள் அடிமையுசம் என்று அமித்ஷாயிசம் என்று செல்லுவர்கள் முழுசாய் நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று சொல்வார்கள் அது மாதிரி நேற்று டெல்லியில் காரில் மாறி மாறி போன பழனிச்சாமியை பார்த்து காலிலே விழுந்த பிறகு கர்ச்சீப்பை முகத்தை மூட கர்சிப்பு எதற்கு இவர் தரம் தாழ்ந்த பேச்சுக்கள் எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா தேவையில்லை மக்களாட்சியில் மக்களுக்கு மதிப்பளித்து பதில் அளிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது அதுவும் வெறும் சொல் அல்ல செயல்களாலும் திட்டங்களாலும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், விடியல் பயண திட்டம்,புதுமைப் பெண் திட்டம் நான் முதல்வர் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நம்மைக் காக்க 48 இந்தப் பயன்களைப் பற்றி நான் சொல்வதை விட கோடிக்கணக்கான மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத துணிச்சலாக நேருக்கு நேர் எதிர்த்து கொண்டு இருக்கிறோம் தொகுதி வரையறை என்று சொன்னபோது எதிர்த்து நிற்கின்றோம் கவர்னரை வைத்து நம்மை முடக்க நினைத்தால் சட்ட ரீதியாக எதிர்த்து நிற்போம் மாநிலம் தான் நாட்டிற்கு அடித்தளம் என்பதை அழுத்தம் திருத்தமாக ஒன்றிய அரசுக்கு சொல்கின்றோம்
இப்படி போராடி தமிழ்நாட்டை தலை நிமிர செய்திருக்கிறோம்
தமிழ் தமிழ்நாட்டின் மண்ணை காக்கும் கடமை நம்மிடம் தான் உள்ளது
ஒன்றிய அரசு இந்தி மொழியை திணிக்கிறார்கள் மாணவர்களை பழி வாங்கக்கூடிய நீட் தேர்வை நீக்க மறுக்கிறார்கள் மாணவர்களின் கல்வி நிதியை கூட விடுவிக்க மறுக்கிறார்கள் கீழடியில் தொன்மைகளை மறைக்கிறார்கள் வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் வாக்குரிமையை பறிக்கிறார்கள் அந்நாளும் சரி இந்நாளும் சரி அடக்குமுறைக்கு இங்கே நோ என்றி தான் மொத்தத்தில் பாஜகவிற்கு நோ என்றி தான் இது பெரியார் அண்ணா கலைஞர் செதுக்கிய தமிழ்நாடு மூன்று முறை தொடர்ந்து ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தோம் தமிழ்நாட்டில் மட்டும் உங்கள் மோடி மஸ்தான் வேலை தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவில்லை இன்னுமா எங்களைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை இங்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல இந்த முப்பெரும் விழாவில் தொலைக்காட்சியில் சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு சொல்கிறேன் தலைமுறை தலைமுறையாக போராடி எத்தனையோ பேர் உயிர்த்தியாகம் செய்து பெற்றுத் தந்த உரிமைகள் எல்லாம் நம் முன்பே பறிபோக அனுமதிக்கலாமா பாஜகவை தடுத்து நிறுத்தவில்லை என்றால் அடுத்தது மாநிலங்களே இல்லை என்று தான் நகர்த்துவார்கள்
மொழிப்போர் நடத்தி இந்தியாவை காப்பாற்றியதோ அதேபோல உரிமை போர் நடத்தி நாட்டை காப்பாற்ற வரலாற்றுக் கடமை இருக்கிறது நாம் இதை செய்யவில்லை என்றால் நம்முடைய கொள்கை என்னவாகும் இதற்கு போராடவில்லை என்றால் எதற்கு போராடுவது இதுதான் முக்கியம் இந்த போராட்டத்தில் உங்களுடன் ஒருவனாக 23 வயதில் முத்துவேல் கருணாநிதி ஆகிய நான் சிறைக்குச் சென்றேன் இந்த மேடையில் உறுதியாக சொல்கிறேன் தாய்மார்கள் இளைஞர்கள் விவசாயிகள் எல்லோருடைய நலனுக்காக உழைப்பேன் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையானதை தொடர்ந்து பார்த்து பார்த்து செய்து வருகிறோம் நமக்கு துணையாக பெரியார் அண்ணா கலைஞர் அவர்கள் விதைத்த இன உணர்வை நம்மிடத்தில் உள்ளது
எட்டு கோடி தமிழ் மக்களின் ஆதரவு பக்கபலமாக உள்ளது இதே உறுதியோடு போராடுவோம் கட்சிக்கான போராட்டமும் முதலமைச்சர் பதவிக்கான போராட்டமும் ஆட்சி அதிகாரத்திற்கான போராட்டமோ இல்லை தமிழ்நாட்டு மக்களுக்கான போராட்டம் தமிழ்நாட்டைக் காக்க ஓரணிகள் திணற வேண்டும் கரூரிலிருந்து பெரியாரின் பிறந்த நாள் என்று உரக்கச் சொல்வோம் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் டெல்லிக்கு கேட்பதைப் போல அனைவரும் உறக்க சொல்ல வேண்டும் எனக்கூறினார்.