Skip to content

கொல்கத்தா தீ விபத்து: கரூரை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

மத்திய  கொல்கத்தாவில்  உள்ள  ஒரு தனியார் ஓட்டலில் நேற்று இரவு  8.15மணி அளவில்,  திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 5 தளங்கள் கொண்ட இந்த சொகுசு விடுதியில்  அறையில் தூங்கிகொண்டிருந்த பலர் அலறி அடித்து ஓடினர்.  மேல் தளங்களில் இருந்தவர்கள் மாற்றுப்பாதையில் ராட்சத ஏணிகள் மூலம் இறக்கி மீட்கப்பட்டனர்.

ஆனாலும்  14 பேர்  தீயில் கருகி இறந்து விட்டனர். இவர்களில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும் இறந்தனர்.  அவர்களது பெயர் முத்து கிருஷ்ணன்,  தியா, ரிதன்  என தெரியவந்துள்ளது.  தீயில் கருகிய 14 உடல்களும் மீட்கப்பட்டன. பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் மனோஜ்குமார் வர்மா  தெரிவித்தார்.  இந்த தீ விபத்துக்கான  காரணம்  உடனடியாக தெரியவில்லை.  இது குறித்து விசாரிக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!