தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம்1. 1 5மணி அளவில் மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் வந்தார். அங்கு சோதிக்குடி என்ற இடத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே. என். நேரு, மெய்யநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் திருவெண்காடு சென்று தங்கினார். மாலை 5 மணிக்கு மயிலாடுதுறையில் வீதிவீதியாக சென்று ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திக்கிறார். கால்டெக்ஸ் என்ற இடத்தில் தொடங்கி பட்டமங்கலத்தெரு, கடைவீதி, கச்சேரி சாலை, செல்கிறார். அங்கும் கருணாநிதி சிலையை ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் இரவில் அரசினர் சுற்றுலா மாளிகையில் தங்கும் முதல்வர் ஸ்டாலின் நாளை அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.