அரியலூர் மாவட்டம் ராமநல்லூர் கிராமம் கொள்ளிடம் ஆற்றில் நடு திட்டில் உள்ளது.இக்கிராமத்திற்க்கும் அழகிய மணவாளன் கிராமத்திற்கும் இடையே உள்ள ஆற்று பகுதியில் இன்று காலை திடீரென ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கிய சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் ஓய்ந்த நிலையில், திடீரென கொள்ளிடம் ஆற்றுக்குள் ஹெலிகாப்டர் வந்து இறங்கியதால் தஞ்சை, அரியலூர் மாவட்ட மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் ஆற்றுக்குள் படையெடுக்க தொடங்கினர். ஹெலிகாப்டரை நோக்கி மக்கள் முன்னேறியபோது யாரும் அருகே வரவேண்டாம் என்று ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் கூறினர்.
அதற்குள் மேலும் பொதுமக்கள் கூட்டம் கூட ஆரம்பித்ததால் தரை இறங்கிய ஹெலிகாப்டர் மீண்டும் பறந்து சென்றது
இது குறித்து அரியலூர் மாவட்ட காவல்துறையினரிடம் கேட்ட போது தஞ்சாவூர் ராணுவ மையத்தில் இருந்து ஹெலிகாப்டர் பயிற்சி மேற்கொள்வதற்கு கொள்ளிடம் ஆற்றில் இறங்கியதாகவும், மீண்டும் பறந்து சென்றதாகவும் தெரிவித்தனர்.அதில் இரண்டு பேர் மட்டும் வந்ததாகவும் தெரிவித்தனர்