Skip to content

கோவை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை..

கோவை,பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் அம்பேத்கர் வீதியில் வசித்து வருபவர் வெற்றிவேல், இவரது மனைவி ஈஸ்வரி பொள்ளாச்சியில் உள்ள வெங்கட்ரமணன் வீதி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் வீட்டிலிருந்த தலைமை ஆசிரியை ஈஸ்வரி தூக்கில் தொங்கிவாறு
இருந்ததை கண்ட அவரது மகன் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஈஸ்வரியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆசிரியை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்ட போது ஆசிரியை ஈஸ்வரி
வீடு கட்டுவதற்கு கடன் வாங்கியதாகவும், மேலும் மகன்களின் படிப்பு செலவு போன்றவைகளுக்கு தொடர்ந்து கடன் வாங்கி இருந்ததாகவும்,
பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்ததால் தற்கொலை செய்துள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.,

இருப்பினும் இவர் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு காரணங்கள் உள்ளதா என்று கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியை கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!