கோவை, கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விளாங்குறிச்சி to காப்பி கடை சாலை அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நேரு மற்றும் கோவை, கீரணத்தம் பகுதி சேர்ந்த சுதர்சன் ஆகிய இருவரை கைது செய்து அவர்கள் இடம் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சா மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ
அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.