Skip to content

பொள்ளாச்சி அருகே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்..

கோவை,பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டு பாளையம் அரசு பள்ளியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் நித்தியானந்தன் ஏற்பாட்டில் நடைபெற்ற மருத்துவ முகாமை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி துவக்கி வைத்தார்

முகாமில் இருதய நோய் காது மூக்கு தொண்டை மனநல மருத்துவம் சர்க்கரை நோய், புற்றுநோய் நரம்பியல் சிகிச்சை குழந்தை நலம் மகப்பேறு மருத்துவம் தோல் நோய் சிறுநீரக கோளாறு போன்ற நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் செங்குட்டுப்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் பரிசோதனை முடிவில் நோய்களினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

அதைத்தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ

முகாமில் கிராம மக்கள் பயன் தரும் வகையில் குறிப்பாக முதியோர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் கண்டறியும் வகையில் மருத்துவ உபகரணங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சுமார் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்று இலவசமாக பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் இதில் கலந்து கொள்பவர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்திருப்பது குறித்து முதலமைச்சர் வழிகாட்டிதின்படி நமது மாநில மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு குரல் எழுப்ப வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது விவசாயம் மற்றும் பல்வேறு தொழில்கள் பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் வரும் இரண்டாம் தேதி அனைத்து கட்சிகளின் சார்பில் திருப்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்

முகாமில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில மருத்துவ அணி செயலாளர் மருத்துவர் சதாசிவம் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் ஞானசுந்தர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!