Skip to content

கோவையில் மாபெரும் சிலம்பம் போட்டி… 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

 

கோவை புலியகுளத்தில், ஏரோ சிலம்பாட்ட அகாடமி சார்பில், திமுக கோவை மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளரும், சிலம்பாட்ட ஆசானுமான அர்ஜுனன் தலைமையில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன் துவக்கி வைத்தார்.

இந்த சிலம்பாட்ட போட்டியில், கோவை, ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், தாராபுரம் பகுதிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் பரிசுகளாக வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சிலம்பாட்ட மூத்த ஆசான்கள் குணசேகரன், பழனிச்சாமி மற்றும் நமசிவாயம் ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், திமுக தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக், மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர் டாக்டர்.மகேந்திரன், கோவை மாநகர் மாவட்ட துணைச்செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா, முன்னாள் எம்பி நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் வெநா.உதயக்குமார், முமச.முருகன், பகுதிக்கழக செயலாளர்கள் பசுபதி, கோவை லோகு, மார்க்கெட் மனோகரன், டெம்போ சிவா, மாமன்ற உறுப்பினர்கள் சந்தோஷ், லாரா பிரேம்தேவ், குணசேகரன், மற்றும் மணிகண்டன், சுரேஷ், பாபு, வழக்கறிஞர் கொங்கு அசரப், கோவை இஸ்லாம், ஆர்எஸ்.புரம் பூபாலன், பிரின்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!