கோவை மாநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையில் நின்றுகொண்டு வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசாருக்கு கோடை வெயிலை சமாளிக்க நவீன தொழில் நுட்பத்தில் உருவாகி உள்ள ஏ.சி.வைத்த ஹெல்மெட்டை மாநகர காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் போலீசாருக்கு வழங்கினார்.
கோயமுத்தூர் ரவுண்ட் டேபிள் 20 அமைப்பின் வாயிலாக வழங்கப்பட்டுள்ள , பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஹெல்மெட்டில் உள்ள சிறிய வகை ஏ.சி.மெஷினை இயங்கச் செய்து குளுகுளு காற்று வழங்கப்படுகிறது.
முதல் கட்டமாக தற்போது 36 ஏ.சி.ஹெல்மெட் வழங்கி உள்ளதாகவும்,
கோடை வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு இது சற்று ஆறுதலை ஏற்படுத்தும் என மநகர காவல் துறை ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்தார்..
இந்நிகழ்ச்சியில் கோயமுத்தூர் ரவுண்ட் டேபிள் 20 அமைப்பின் தலைவர் அருண் குணசேகரன் உடனிருந்தார்.சுட்டெரிக்கும் வெயிலிலுக்கு போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி.ஹெல்மெட் வழங்கியுள்ளது,போக்குவரத்து போலீசார் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.