Skip to content

கோவில்பட்டி தீக்குச்சி குடோன் தீ விபத்து..பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

 கோவில்பட்டி தீக்குச்சி குடோன் தீ விபத்தில் சிக்கி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சுடலைமுத்து(42), கணேசன் (47) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மூக்கரை விநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை, பாண்டவர்மங்கலம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை தொழிலாளர்கள் தீக்குச்சி மூட்டைகளை இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீக்குச்சி மூட்டையை இழுத்துச் சென்றபோது, உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. இதில் பிட்டராக வேலை பார்த்த கோவில்பட்டி அருகே விஜயாபுரியை சேர்ந்த சமுத்திரம் மகன் கார்த்திக்(27), கேரளாவை சேர்ந்த கணேசன்(47), விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பேரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுடலைமுத்து(42) ஆகிய 3 பேர் மீதும் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் மூவரையும் மீட்டனர். இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று சிகிச்சை பெற்றவந்த 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!