கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சையில் உள்ள அருள்மிகு நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில் பாமா, ருக்மணி, நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. தஞ்சை கீழவாசல் சாலையில் பாமா, ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் ஆலயம் அமைந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பாமா, ருக்மணி நவநீத கிருஷ்ணனுக்கு விபூதி, தேன். இளநீர், மஞ்சள், பழங்கள், பால், தயிர். சந்தனம்
உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் வரிசையில் அமர்ந்து அபிஷேகத்தை கண்டு கிருஷ்ணரை வழிப்பட்டனர்.