Skip to content

குளித்தலை-அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம்… அமைச்சர் மா.சு- VSB பார்வை

கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.40 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் அதனை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், கரூர் கலெக்டர் தங்கவேல், கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோருடன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ஒன்றிய நிதியிலிருந்து ரூபாய் 40 கோடி மதிப்பில் புதிய நான்கு மாடி அடுக்கு கட்டிடம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு பின்னர் கட்டிட பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ள நிலையில் சில மருத்து உபகரணங்கள் பொருத்தும் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து பட்டு பின்னர் மிக விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார் எனவும், முன்னர் 130 படுக்கைகளுடன் செயல்பட்டு வந்த இந்த மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டிடத்தில் 300 படுக்கை

வசதிகளுடன் எலும்பு சிகிச்சை பிரிவு குழந்தைகள் நலப்பிரிவு, மகப்பேறு பிரிவு, டயாலிசிஸ் பிரிவு, ரத்த வங்கி, மகளிர் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் கீழ் மருத்துவம் பார்க்கப்படும் என்றும், தமிழ்நாட்டில் தற்போது அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 7 லட்சம் ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

அரசு மருத்துவமனைகளில் சில இடங்களில் மருத்துவர் வருகை இல்லாமல் உள்ளிட்ட சில குறைபாடுகள் இருப்பின் அதனை நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் இன்று கரூரிலிருந்து கொடுமுடி வரை நடை பயிற்சி மூலமாக சென்று அங்குள்ள அரசு மருத்துவமனை ஆய்வு செய்த போது அங்கு மருத்துவர் காலை பணிக்கு உரிய நேரத்தில் வராமல் இருந்ததை அடுத்து அவருக்கு துறை ரீதியான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் காலை 8 மணிக்கு நோயாளிகளுக்கு உணவு வழங்க வேண்டிய நிலையில் சமையலர் பணிக்கு வராமல் இருந்ததால் அவரையும் இதனை கவனிக்க தவறிய ஆண் செவிலியர் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் நேற்று சீர்காழியில் மகப்பேறு சிகிச்சை பெற வந்த 36 கர்ப்பிணி மற்றும் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட மருந்தில் குறைபாடு இருந்ததால் அவர்கள் அனைவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர் இதுகுறிச்சி எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி கேட்கையில் இதுகுறித்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனரிடம் விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாகவும் மேலும் அவர்களுக்கு சரியான கலவை விகிதத்தில் இல்லாத மருந்துகள் வழங்கப்பட்டதாலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகும் இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தவறுகள் இருப்பின் உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட 36 பேரும் மயிலாடுதுறை கடலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளை தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

error: Content is protected !!