தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 348 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள், நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடங்கள், இந்திய மற்றும் ஓமியோபதி பிரிவுக் கட்டடங்கள், நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பல்வேறு சுகாதார நிலையக் கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் 4 தளங்கள் கொண்ட 300 படுக்கை வசதிகள் கொண்டு கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு விழாவில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அவருடன் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவர் பூமிநாதன், நகர் மன்ற தலைவர் சகுந்தலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

