Skip to content

மருத்துவமனையில் புகுந்து ஆசிரியை கொலை ஏன்? கணவன் பகீர் தகவல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி  என்ற சேர்ந்த  போலீஸ் டிஎஸ்பி ராமசாமி  என்பவரது மகன் விஷ்ரூத்(30). இவர் ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ருதி(27) இவருக்கும் ஸ்ருதி( 27) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு மகன்கள்  உள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்  விஷ்ருத்  சென்னையில்  டிரைவர் வேலை செய்து வந்தார். அப்போது சென்னையை சேர்ந்த ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதலுக்கு ஸ்ருதி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.  ஸ்ருதியின் பெற்றோர் இருவரும் டாக்டர் என கூறப்படுகிறது.

பின்னர் விஷ்ருத், ஸ்ருதி இருவரும்  பட்டவர்த்தி வந்து குடித்தனம் நடத்தினர்.  தற்போது ஸ்ருதி முசிறியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். அதே பள்ளியில் தனது இரு மகன்களையும்  படிக்கவைத்தார்.

இந்நிலையில்  கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.  வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு  ஏற்பட்ட சண்டையில் விஷ்ருத் , மனைவியை கடுமையாக தாக்கினார்.  இவர்  உடலில பலத்த காயங்கள் ஏற்பட்டது . இதனால் அவர் குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த  விஷ்ருத் , தனது  மனைவிக்கு உதவியாக இருப்பதாக கூறி அங்கு இருந்து கொண்டார்.   ஸ்ருதிக்கு  குளுக்கோஸ் ஏறிக்கொண்டு இருந்தது. அவர் மயக்க நிலையில் இருந்தார்.

நேற்று அதிகாலை 5மணிக்கு  விஷ்ருத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால்,  மனைவியை சரமாரி குத்தினார். மூன்று இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர் அலறினார். சிறிது நேரத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. விஷ்ருத் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய விஷ்ருத்தை கைது செய்தனர்.  அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில்  கொலைக்கான காரணங்களை அவர்  கூறிஉள்ளார்.   குடும்பத்தகராறு காரணமாக கொலை நடந்ததாக போலீஸ்தரப்பில் கூறப்பட்டது. விஷ்ருத் அடிக்கடி  மது மருந்தும் பழக்கம் உள்ளவராம். இதுவும் சண்டைக்கு ஒரு காரணம் என  கூறப்படுகிறது.

விஷ்ரூத்தின் தந்தை  ராமசாமி,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கருப்பு பூனை படையில் டிஎஸ்பியாக வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

error: Content is protected !!